சிறிலங்கா துடுப்பாட்ட அணி லண்டனில் விளையாடப் போகிறதாம் என்று அறிந்ததுமே தமிழின அழிப்பின்; ஆறாத காயங்களோடு வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கும்
தமிழ் மக்கள் பலர் “சிறிலங்கா துடுப்பாட்ட அணி நம் முன்னே விளையாடுவதா? அதற்கு அனுமதிக்கலாமா? எனத் துடித்தெழுந்திருப்பார்கள்.
நாம் ஏதாவது செய்தாக வேண்டும். தமிழர் நாம் நம் மண்ணில் வாழ முடியாமல், நாடு நாடாக, ஏதிலிகளாக ஏங்கிய விழிகளுடன் அலைவதற்குக் காரணமான சிறிலங்கா இனவாத அரசைப் பிரதிநிதித்துவப் படுத்தி உலக அரங்கில் விளையாட வந்திருக்கும் சிறிலங்கா துடுப்பாட்ட அணி லண்டனில் விளையாடும் போது நாம் நமது உணர்வை வெளிப்படுத்தியாக வேண்டும் எனப் பலர் துடிப்பார்கள்.
ஆம், இன்று நேற்றல்ல... இலங்கை என்னும் நாடு பிரித்தானியர் பிடியிலிருந்து விடுபட்ட காலத்திலிருந்தே சிறிலங்கா அரசு, தமிழீழத்தில் இனவாதத் துடுப்பெடுத்து, தமிழ் மக்களை இன்று வரை பந்தாடிக்கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. மறக்க முடியாது.
முள்ளிவாய்க்காலோடு முடிந்தது கதை என சிறிலங்கா ஆடும் அரசியல் சதுரங்க விளையாட்டில் அவதானமாக ஆடி, சிறிலங்கா இனவாத அரசை நீதியின் முன் நிறுத்தித் தமிழர்கள்pன் இலக்கை வென்றெடுக்கும் வரை தொடர்ந்து.... தொடர்ந்து.... தொடர்ந்து.... தமிழர்களும் காய் நகர்த்த வேண்டியது காலத் தேவை. எவ்வளவு காலம் இப்படித் தொடரப் போகிறோம் என்பது கேள்வியாக இருக்கக் கூடாது. தமிழர் தம் இலக்கை அடைவதற்கு எவ்வளவு காலம் தேவைப் படுமோ அவ்வளவு காலம் அடியெடுத்து வைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதே முடிவாக இருக்கவேண்டும்.
நினைத்துப் பாருங்கள்...... இனவாத அரசின் தலைவன் மகிந்த ராஜபக்ச லண்டன் வந்த போது கொட்டும் பனியில், உடல் உறையும் குளிரில் தமிழர் நாம் அனைவரும் ஒன்றாக நின்று மகிந்தவை ஓட ஓட விரட்டியதையும் அதன் பின்னர் ராஜவிருந்துக்கு ராஜபக்சே வேண்டாம் என அலையெனத் திரண்டு வந்து கொட்டொலி எழுப்பி, தமிழினத்தைக் கொன்றழிப்பவனைத் தன் நாட்டுக் கொடியின்றிப் போகச் செய்ததையும் நினைத்துப் பாருங்கள்.....
வாருங்கள். இது எமக்கான களம். சந்தர்ப்பங்கள் எப்போதும் வாய்ப்பதில்லை.
இப்போது அது மீண்டும் கிடைத்திருக்கிறது. அதை முற்றாகப் பயன்படுத்துவோம்.
நம்மால் சாதிக்க முடியும் என்பதற்குச் சரித்திரம் சாட்சி. இன்னும் சாதிக்க எவ்வளவோ உள்ளது என்பதைக் கூறும் மனசாட்சி.
திறந்தவெளிச் சிறையாக்கப்பட்டுள்ள தமிழீழ மண்ணில் நம் உறவுகள் தம்மால் முடிந்தளவு தடம் பதிக்கும் போது உலகெங்கும் பரந்துள்ள நாம் ஒன்று திரண்டு வடம் பிடிக்க வேண்டாமா? வாருங்கள் மே 31ம் நாள் காலை 10 மணிக்கு Nறு8 8ஞNஇளுவ துழாn’ள றழழனஇ டுழசன’ள ஊசiஉமநவ புசழரனெ நோக்கி அனைவரும் வாருங்கள்..

0 Responses to துடுப்பாட்டமா? துடித்தெழ வேண்டாமா??