Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2014 ஆம் ஆண்டு டிசம்பருடன் ஆப்கானில் தனது பிரதான இராணுவ நடவடிக்கை முடிகின்றது எனவும் இதனால் அங்குள்ள அனைத்து அமெரிக்கப் படைகளையும் மீட்கப் போவதாகவும் அதிபர் ஒபாமா முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் 2014 உடன் அனைத்துப் படைகளும் வாபஸ் பெறப் படப் போவதில்லை என்றும் 9800 அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானில் தொடர்ந்து நீடிப்பதுடன் அவற்றின் தலையீடு 2016 இல் தான் முடிவடையும் செவ்வாய்க்கிழமை மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனது இப் புதிய திட்டத்தை அதிபர் பாரக் ஒபாமா விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படும் போதும் இத்திட்டம் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மற்றும் நேச நாடுகளுடன் ஆப்கான் கைச்சாத்திட சம்மதிப்பதிலேயே தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிகாரிகள் மேலும் கூறுகையில், 'BSA எனப்படும் பிராந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஆப்கான் அரசு கையெழுத்திட்டால் மட்டுமே 2014 இற்குப் பின் அங்கு இராணுவப் பிரசன்னைத்தினை நிறுத்த முடியும் என்பதுடன் இதன் மூலம் 2015 தொடக்கத்தில் ஆப்கானின் பல பகுதிகளில் நேட்டோ மற்றும் ஆப்கான் இராணுவத்துடன் இணைந்து 9800 அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு அமைதி நடவடிக்கையில் ஈடுபட முடியும். மேலும் 2015 இறுதியில் இப்படை எண்ணிக்கை மேலும் அரைவாசியாகக் குறைக்கப் படும்' என்றுள்ளனர். மேற்கொண்டு 2016 இறுதியில் அமெரிக்கத் தூதரகத்துடன் ஈராக்கைப் போன்று பாதுகாப்பு வழிநடத்தல் அலுவலகம் ஆகியவை மாத்திரமே ஆப்கானில் எஞ்சியிருக்கும் எனவும் இவர்கள் இறுதியில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஞாயிற்றுக் கிழமை திடீர்ப் பயணமாக ஆப்கானை வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா அங்கு தங்கியுள்ள அமெரிக்க இராணுவத்தினரைச் சென்று பார்வையிட்டார். இத் திடீர் விஜயம் காரணமாக ஒபாமாவை ஆப்கான் அதிபர் கர்சாய் நேரடியாகச் சந்திக்க மறுத்து விட்ட போதும் ஒபாமா அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆப்கான் அதிபர் ஹ்மீட் கர்சாயி ஜூன் தேர்தலுடன் இவ்வருடம் பதவி விலகவுள்ளார். மேலும் ஆப்கானில் தற்போது தலிபான் உட்பட தீவிரவாதக் குழுக்களுடன் போராடுவதற்காக 51 000 அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் அங்கு தற்போது தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் ஆப்கானில் 9800 அமெரிக்க துருப்புக்களை நிலைநிறுத்த் ஒபாமா திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com