Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் பங்கேற்க வேண்டும் என இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவனந்தாவால் மீண்டும் விடுக்கப்பட்ட அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

தீர்வு தொடர்பில் அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையே ஒரு அனுசரணையாளராக பேச்சுவார்த்தைகளை தொடங்க தென் ஆபிரிக்கா உதவ முன்வந்துள்ள நிலையில், அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே டக்ளஸின் முன்னெடுப்பு அமைந்துள்ளதாக   கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் என்றும் , நல்ல பல சந்தர்பங்கள் கூட்டமைப்பின் நிலைப்பாட்டாலேயே வெற்றிபெறவில்லை என்றும், அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படக் கூடாது எனவும் டக்ளஸ் கூறுகிறார்.   

ஆனால் நாட்டின் வடக்கே இராணுவத்தின் பிரசன்னம், ஆட்கள் கைது செய்யப்படுவது போன்ற பிரச்சினைகளையே தீர்க்க முடியாத இவரால் இனப் பிரச்சினைக்கான தீர்வில் எவ்வாறு பங்காற்ற முடியும் எனக் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 Responses to முடிந்தால் இராணுவப்பிரசன்னத்தை தடுத்து நிறுத்த டக்ளஸிற்கு சுரேஸ் சவால்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com