Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி மண் மீதான சிறீலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்பு போருக்குப்பின்னர் (2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப்படுகொலைக்கு பின்னர்) நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும், உள்ளுராட்சிசபை தேர்தலிலும், வடமாகாணசபை தேர்தலிலும் “முள்ளிவாய்க்கால் அவலத்தையும், வலிகளையும், இழப்புகளையும் திறந்த வெளி அரங்குகளில் பகிரங்கமாகவே கூறி”, தமிழ் மக்களின் வாக்குகளை கேட்டு பதவிக்கு வந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்,  தமிழினப்படுகொலை நாளுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் திட்டமிட்டு பெருத்த மௌனம் சாதித்து வருகின்றனர்.

மே 18 தமிழினப்படுகொலை நாளை தேசிய துக்க நாளாக அனுஸ்டிப்பது தொடர்பில் மதில் மேல் பூனையாகவும், நனைந்த கோழியாகவும், நாணல் புல்லாகவும் இருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில், கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், மாகாணசபை உறுப்பினர்களிடமும் ஊடகவியலாளர்களும், பொதுமக்களும், தமிழக மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் சரமாரியாக கேள்விக்கணைகளை ஆக்ரோசமாக தொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த கேள்விக்கணைகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், பிரதிநிதிகளும் கடும் அழுத்தத்துக்கும் நெருக்கடிக்கும் பின்னர் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? தமது நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்துவார்களா? அவர்கள் தமது ஊடக அறிக்கைகளில் அப்படி என்னத்தை புதிதாக கூறிவிடப்போகிறார்கள்?

இராணுவ பேச்சாளர் கூறியது போலவே, சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய தத்தமது வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி அமைதியான முறையில் வழிபாடுகளில் ஈடுபடுங்கள். உறவுகளை நினைவு கூறுங்கள் என்று பொதுமக்களுக்கு கூறப்போகின்றார்களா? எதைத்தான் கூறப்போகிறார்கள்? பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

இதேவேளை பொது இடத்தில் மக்களை ஒன்று கூட்டி தமிழினத்தின் தேசிய துக்க நாளாக மே 18 ஐ கடைப்பிடிக்க திராணியில்லாமல், தமக்கு மட்டும் தெரிந்தவர்களுடன் வீட்டு மூலைகளுக்குள்ளும் கட்சி அலுவலகங்களுக்குள்ளும் மிகவும் இரகசியமான முறையில் விளக்கெரித்து விட்டு, தாம் எதையோ பெரிதாக சாதித்து விட்டதாக அந்த நிகழ்வை படம் எடுத்து ஊடகங்களுக்கு செய்தி அனுப்பி “பப்பிளிசிட்டி” (Publicity) தே
ட, கூட்டமைப்பின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வடக்கிலும் கிழக்கிலும் பெரியளவில் தயாராகி வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. எப்படியென்றாலும் மே 18 அன்று இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

0 Responses to முள்ளிவாய்க்காலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com