Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு முடியும் வரை, ஜெயலலிதா முதல்வர் பதவியைத் துறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகியிருந்த புதிய மனு இன்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இதுத் தொடர்பாக சென்னையை சேர்ந்த டிராஃபிக் ராமசாமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு  முடியும் வரை அவர் முதல்வர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது, கிரிமினல் குற்றசாட்டுக்களில் சிக்கிய எம் எல் ஏ, எம்பிக்களின் பதவியை நீட்டிக்க விடுவதா  அல்லது பதவி நீக்கம் செய்வதா என்பதுக் குறித்த வழக்கின் மீது தற்போது  விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், அந்த வழக்கின் தீர்ப்பு இந்த மனுவிற்கும் பொருந்தும் என்பதால், அந்த வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு மனுதாரர் மீண்டும் இதுக் குறித்து மனுத் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

0 Responses to வழக்கு முடியும் வரை ஜெயலலிதா முதல்வர் பதவியை துறக்க வேண்டும்: புதிய மனு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com