Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய, கடலூர் பரங்கிப்பேட்டையில் பதுங்கியிருந்த ராஜஸ்தான் மாநில இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்தை சேர்ந்த அஷ்ரப் உட்பட 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் தங்கியிருந்த 12 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

செல்போன் டவர் மூலம் சிக்கிய அஷ்ரப்

இச்சம்பவங்களில் மொத்தம் 5 பேர் தேடப்பட்டு வந்தனர். இவர்களில் 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த 4 பேரும் சிக்கியது தெரியாமல் தொடர்ந்தும் அவர்களுடன் அஷ்ரப் அலி செல்போனில் பேசி வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அஷ்ரப் அலியின் செல்போன் மூலம் இருப்பிடத்தை ராஜஸ்தான் போலீசார் தெரிந்து கொண்டனர்.

பின்னர் தமிழக போலீசார் உதவியுடன் நேற்று நள்ளிரவு பரங்கிப்பேட்டையை தமிழக மற்றும் ராஜஸ்தான் பொலிசார் முற்றுகையிட்டனர்.

அஷ்ரப் அலி உட்பட இருவரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களுடன் தங்கியிருந்த 12 பேரையும் போலீசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை குண்டுவெடிப்பில் தொடர்பா?

இவர்களுக்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஸ்லீப்பர் செல்கள் மூலம் சென்னை குண்டுவெடிப்பை அஷ்ரப் அலி செயல்படுத்தினாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

யார் இந்த அஷ்ரப்?

தற்போது பிடிபட்டுள்ள அஷ்ரப், நிதா ஈ ஹக் என்ற உருது மொழி பத்திரிகையின் ஆசிரியர். ராஜஸ்தானின் ஜோத்பூரை தலைமையிடமாகக் கொண்டு வெளி வந்த இந்த பத்திரிகை, முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களில் இணைய இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் முஸ்லிம் இளைஞர்களை ஸ்லீப்பர் செல்களாக எப்படியெல்லாம் செயல்பட் வைப்பது என்பதற்காக பயிற்சியையும் அஷ்ரப் அலி கொடுத்திருப்பதாக தெரிகிறது.

கடந்த மார்ச் 23-ந் திகதி டெல்லி பொலிசார் இந்தியன் முஜாஹிதீன் கமாண்டர் ரெஹ்மான் கைது செய்யப்பட்ட முதல் அஷ்ரப் அலி தலைமறைவாகிவிட்டார். அப்போது முதல் அஷ்ரப்பை பொலிசார்தேடி வந்தனர்.

இந்நிலையில்தான் அஷ்ரப்பின் கூட்டாளிகள் போலீசில் சிக்கியிருக்கின்றனர்.

மேலும், அவர்கள் சிக்கியது தெரியாமல் அஷ்ரப்பும் செல்போனில் தொடர்பு கொள்ள இப்போது பொலிசில் மாட்டிக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

0 Responses to சென்னை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com