தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பதும், போரினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும், சர்வதேச சமுகத்தின் ஒத்துழைப்பும்- தலையீடும் இன்றி இலங்கைத்தீவுக்குள் சாத்தியமாகும் சூழல் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வவுனியா மதுராநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கு தளபாடங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையினதும், சர்வதேச சமுகத்தினதும் அழுத்தங்களை முன்னெப்போதும் இல்லாதவாறு சந்தித்துள்ளது. குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் நடத்திய படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிப்பதிலும், பொறுப்புக்கூறுவதிலிருந்தும் இலங்கை அரசாங்கம் அவ்வளவு இலகுவில் விலகியிருந்து விட முடியாது. அதேவேளை காலம் கடத்துவதற்கான வாய்ப்புகளையும் ஐக்கிய நாடுகள் பொறிமுறைகள் இனியும் இலங்கை அரசாங்கம் வழங்காது.
போர் முடிந்து ஐந்து வருடங்களை கடந்தும், பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமற்போன தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றார்கள். நீண்ட காலமாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் தமது விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தில் இழக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உயிர் உடைமைகளுக்கான நஷ்ட ஈட்டை அரசு இன்னமும் தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. மேலும் மேலும் தமிழர் நிலங்களையும், இயற்கை வளங்களையும் சூறையாடி வருகின்றது. போருக்குப் பின்னரான அபிவிருத்தி மீள் நல்லிணக்கம் என்பவற்றில் உண்மைத்தன்மை முற்றிலுமாக இல்லை.
எனவே இலங்கை அரசாங்கத்தின் இன ஒடுக்குமுறைகளுக்கும் ஏதேச்சதிகார போக்குகளுக்கும் எதிராக புலத்தில் எமது உறவுகள் கனதியான போராட்டங்களையும், நம்பிக்கை அளிக்கும் செயல்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். எனவே நாங்கள் பார்வையாளராக இருந்து விட்டுப்போக முடியாது. சிறு எறும்பை மிதித்தால் அது மிதிப்பவரை சாகும் தருவாயிலும் பலம் கொண்டவரை கடித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியே ஆகும்.
நாம் அமைதியாக இருக்க முடியாது. தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் புலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளுரில் நாமும் பக்கபலமாக காத்திரமான ஜனநாயக போராட்டங்களை விரைவுபடுத்த உள்ளோம். ஜனநாய போராட்டங்களின் வெற்றி மக்கள் எழுச்சியிலேயே தங்கியுள்ளது” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேசத்தின் ஒத்துழைப்பின்றி தீர்வு காண முடியாது: சிவசக்தி ஆனந்தன்