Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’தமிழர்களைப் பூண்டோடு கரு அறுக்கத் துடிக்கும் இராஜபக்சேவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பது மட்டும் அன்றி,  சிங்கள பௌத்தத் துறவி அனகாரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிட்டு உள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

சிங்கள இனவெறிக் கொள்கையை வாழ்நாளெல்லாம் பிரதிபலித்து வந்த பௌத்தத் துறவி தர்மபாலாவுக்கு இப்போது அஞ்சல் தலை வெளியிட வேண்டிய தேவை என்ன?

சிங்களர்களே இலங்கையை ஆளப்பிறந்த ஆரிய வம்சம், ஏனைய தமிழர்களும், முஸ்லிம், கிருத்தவ மக்களும் சிங்கள இனத்துக்கு அடிமைகள் என்று கொக்கரித்தவர்  தர்மபாலா. இவருடைய இனவெறிக் கருத்துகள்தான் சிங்கள தேசிய வெறிகொண்ட பொதுபலசேனா போன்ற அமைப்புகளை வழி நடத்துகின்றன.

இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிருத்தவ சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்காத இந்திய அரசு, பௌத்தத் துறவி அனகரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு புகழாரம் சூட்டுகின்றது. பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு தமிழர்களுக்கு எதிரானது என்று எச்சரிப்பதுடன், பௌத்தத் துறவி தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதற்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.’’

0 Responses to சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலையா?: வைகோ ஆவேசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com