Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மோடிக்கு பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், முன்பு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கோரிக்கையின் பேரில் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்து வைத்து இருந்த 76 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. ஆனால், அவர்களின் 71 படகுகளை இலங்கை அரசு இன்னமும் விடுவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 28ம் திகதி மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 30ம் திகதி பாக்ஜலசந்தியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 புதுக்கோட்டை மீனவர்களை இலங்கை கடற் படையினர் கைது செய்துள்ளனர்.

இந்த மீனவர்களையும், மேலும் சிறைப்பிடித்து வைத்துள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கடிதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com