Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவம் தடை விதிப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியான வரட்சி நிலவியமையினால் தமது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு அந்தப் பிரதேசத்திலுள்ள மீன்பிடி சங்கத்தினரே வெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மீன்பிடிக்க அனுமதி மறுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு மற்றும் சமகால நடப்பு விவகாரங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுபிடியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும் போதே ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கிளிநொச்சி இரணைமடு குளத்தையண்டிய பகுதியில் சங்கம் ஒன்று உள்ளது. இதில் அந்தப் பிரதேசத்தை அண்மித்த சுமார் 120 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களே அந்த குளத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் தொடர்ச்சியாக நிலவிய வரட்சி காரணமாக குளங்களின் நீர் மட்டக்கள் குறைந்து காணப்பட்டன. இதனால், வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களும் வந்து இரணைமடு குளத்தில் மீன்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இது தமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதை கருத்திற் கொண்டு அந்தப் பிரதேச்திலுள்ள மீன்பிடி சங்கத்தினர் வெளி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுத்துள்ளனர். இது அவர்கள் தங்களது பாதுகாப்பிற்காக செய்த விடயமாகும். இவற்றை தவறு என்று கூறமுடியாது. ஆனால், இதற்கும் இராணுவத்திற்கும் இவ்வித தொடர்புகளும் கிடையாது” என்றுள்ளார்.

0 Responses to இரணைமடு குளத்தில் மீன்பிடிக்க இராணுவம் தடை விதிக்கவில்லை: ருவான் வணிகசூரிய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com