Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டாயத்தின் பேரில் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் மன நிறைவுடன் பணி செய்கிறேன் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார்.

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பி.சதாசிவம், தாம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து ஓய்வுப் பெற்றவுடன் சொந்த ஊருக்கு வந்து விவசாயம் பார்க்கவே விரும்பினேன் என்று கூறியுள்ளார். அதற்கான பணிகளைத் துவங்கி அதில் மூழ்கியபோதுதான் தமக்கு கேரள ஆளுநர பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்படி அழைப்பு வந்தது என்று மேலும் அவர் கூறியுள்ளார்.

விவசாயம் பார்க்கத்தானே விருப்பப் பட்டோம், இப்போது அரசு மூலம் வருகிற பணியை மேற்கொள்ளலாமா என்று நான் எனது தாய் மற்றும் மனைவியிதம் ஆலோசனையில் இருந்தபோது, அவர்கள் பதவியை ஏற்றுக்கொள்ள சொல்லி ஊக்கம் கொடுத்தார்கள். இன்னமும் 5 வருடம் நாட்டுக்கு சேவை செய்ய நல்ல வாய்ப்பு என்று இதைப் பயன்டுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்கள். அவர்கள் அறிவுறுத்தலின் பேரிலும், அரசு அழைத்ததன் பேரிலும் கேரள ஆளுநராகப் பதவி ஏற்றுக்கொண்ட நான், இப்போது முழு மன நிறைவுடன் பணிகளை செய்து வருகிறேன் என்று சதாசிவம் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to கட்டாயத்தின் பேரில் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் மன நிறைவுடன் பணி செய்கிறேன்:பி.சதாசிவம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com