ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், வருகிற வெள்ளிக்கிழமைதான் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் ஜாமீன் மனுவை நிராகரித்த நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீன் மேல் முறையீட்டு மனு மட்டும்தான் கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்து சனிக்கிழமை சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டவர்களின் ஜாமீன் மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மேல் முறையீடு மனுக்களும் இன்று அல்லது நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னர் நால்வ்ரின் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இன்று மனுக்களை விசாரிக்க முடியாது என்றும், வருகிற வெள்ளிக்கிழமைதான் ஜாமீன் மனுக்களை விசாரிக்க முடியும் என்றும்
நீதிபதிகள் ஜாமீன் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க மறுத்துள்ளனர்.

0 Responses to ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வருகிற வெள்ளிக்கிழமைதான் விசாரணைக்கு?: உச்ச நீதிமன்றம்