ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீடு வழக்கில் பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகத் தடை விதிக்க வேண்டும் என்று, தேமுதிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு ஜாமீன் மனுத் தாக்கல் செய்து, அந்த மனு தள்ளுபடியும் ஆகிவிட்டது. இதனால் ஜெயலலிதா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டு, அந்த மனுவை வருகிற வெள்ளிக்கிழமைக்குத் தான் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் வாதாடத் தடை விதிக்க வேண்டும் என்றும், பவானி சிங் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஏனோ தானோ என்று பொறுப்பின்றி வாதாடினார் என்றும் தேமுதிக தமது மனுவில் குறிப்பிட்டு உள்ளது.
மேலும், இந்நிலையில் பவானி சிங் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரானால் குற்றவாளிகள் எளிதாக ஜாமீனில் வெளி வந்து சாட்சிகளை கலைக்கக் கூடும் என்பதால் பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகத் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.

0 Responses to ஜெயலலிதா ஜாமீன் மேல் முறையீடு வழக்கில் பவானி சிங் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகத் தடை விதிக்க வேண்டும்: தேமுதிக