திமுக தலைவர் கலைஞர் 30.11.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- இலங்கை அதிபர் ராஜபக்சே வெற்றிபெற வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர் :- கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில எதிர்க் கட்சிகள் இதைக் கண்டித்து அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.
ராஜபக்சே எப்படிப்பட்ட இனப் படுகொலைக் குற்றவாளி என்பதை ஐ.நா. சபை வரை விவாதம் நடத்திக் கொண் டிருக்கிறது. அவரே திரும்பப் பதவிக்கு வர வேண்டுமென்பது, அரசு அலுவலகங்களில் குற்றவாளியின் படத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போலவும், ராஜபக்சே புரிந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் ஆதரிப்பது போலவும்தான் இருக்கும்!
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

0 Responses to ராஜபக்சே வெற்றிபெற வேண்டுமென்று நரேந்திர மோடி வாழ்த்து! கலைஞர் கண்டனம்!