தனக்கு எதிராக 500 கோடி ரூபாய் செலவிட்டு அரசாங்கம் சுவரொட்டிகளை அச்சிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை செலவளிக்கப்பட்டு சுவரொட்டிகளை அச்சிட்டமை தொடர்பில் நான் கவலை கொள்கிறேன். ஏனெனில், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் அவற்றை அழிக்குமாறு அவரிடம் (ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்) கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாரிய மாற்றம் நேற்று(முன்தினம்) ஏற்பட்டது, 20 என்றார்கள் 21இல் ஆரம்பிக்கப்பட்டது. இன்னும் 35 நாட்கள் உள்ளன. 30 நாட்களும் சரியாக வேலை செய்தால் வெற்றிபெற முடியும்.
எங்களுடைய மோதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இல்லை. நாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்யவுள்ளோம். மைத்திரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வந்துள்ளார். அவருக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டும். தற்போது சிறீலங்காவும் இல்லை, யூ.என்.பியும் இல்லை. இதன் காரணமாக நான் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளேன்.
இன்னும் இரண்டு தேர்தல்களே உள்ளன. முதலாவது தேர்தலில் வெற்றிக்கொண்டால் இரண்டவதை வெற்றிக்கொள்ள பிரச்சனையல்ல. சித்திரைப்புத்தாண்டுக்கு பின்னர் எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to எனக்கு எதிராக 500 கோடி ரூபாய் செலவில் சுவரொட்டிகள்: ரணில் விக்ரமசிங்க