சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகினாலும் கூட, தான் விலகப் போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
இந்த நிலையில், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான நிமல் சிறிபால டி சில்வாவும் அரசாங்கத்தை விட்டு விலகி எதிரணியில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
ஆனாலும், தனக்கு அப்படியான எண்ணங்கள் ஏதும் இல்லை என்று கொழும்பில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இலங்கையில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு சர்வதேச நாடுகள் முயற்சிப்பதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியை விட்டு விலகினாலும், நான் விலகப் போவதில்லை: நிமல் சிறிபால டி சில்வா