Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது அகவை கொண்டாட்டங்கள் பிரான்ஸ் பாரிசில் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழ் வர்த்தக நிலையங்களின் பிரதான மையமான லாசப்பல் பகுதியில் மேடை அலங்கார வளைவுகளுடன் நிகழ்வினை, புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், தமிழீழத் தேசிய செயற்பாட்டாளர்களின் பலரும் கூட்டாக முன்னெடுத்திருந்தனர்.

தேசியத் தலைவரின் புகழ்பாடும் பாடல்களுக்கு நடனத்தாரகைகளின் நடனங்களும் இடம்பெற்றிருந்ததோடு,  இசைவட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

மேலும் இலண்டன்  வாழ் வல்வை ஆதிகோவிலடியைச் சேர்ந்த மக்கள் சிலராலும் தேசியத் தலைவரின் அறுபதாவது பிறந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேசியத் தலைவரின் 60 ஆவது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடிய வடமேற்கு லண்டன் மக்கள்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 60 வது அகவை காணும் நாளான 26-11-2014 இன்று வடமேற்கு லண்டன் மக்கள் தலைவரின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியக் கிளையின் இளையோர் அமைப்பான TYCA இன் ஏற்பாட்டில் 227 Preston Road, Wembley, HA9 8NF இல் அமைந்துள்ள TGTE Office இல் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறுவர் முதல் முதியோர் வரையாக நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக அதிகளவான இளையோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்டப வாசலில் நிறைகுடமும்,  தேசியத்தலைவரின் முழு அளவிலான பிரமாண்ட பனரும் வைக்கப்பட்டிருந்தது.

அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்த நிகழ்வில் மங்கள விழக்கினை மகளிர் ஏற்றிவைத்த பின் உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இந்த நிகழ்வில் வருகை தந்திருந்த மிகச்சிறியவர்களான இரு சிறுவர்கள் சதுப்பியை (கேக்) வெட்டி வயதில் முதியவரான ஒரு அம்மாவிற்கு ஊட்டி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து இளையோர் உட்பட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மக்கள் பிரதினிதிகள் பலரும் தேசியத் தலைவனை வாழ்த்தியும், தொடர்ந்து தமிழீழ விடுதலை நோக்கி தலைவனின் வழியில் பயனிக்கவேண்டியது தொடர்பாகவும் உரையாற்றினர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேக், இனிப்புவகை என பலவற்றை வழங்கியதோடு, வான வேடிக்கையையும் நடாத்தி மகிழ்ந்தனர்.

0 Responses to பிரான்ஸ், லண்டனில் கொண்டாடப்பட்ட தலைவர் பிரபாகரனின் 60வது பிறந்தநாள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com