Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை 60தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துக்களையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது  மகிழ்ச்சியை ஆரவாரமாகக் கொண்டாடினர்.

அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையினரின் ஒருங்கிணைப்பில் மாவீரர் நாள் நடைபெறும் பிறிபேர்க் போறும் மண்டபத்தில் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு மத்தியில்தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 60 எழுச்சியாகவும், எளிமையாகவும் கொண்டாடப்பட்டதுடன் வாழ்த்துப்பாவுடன், வாழ்த்துக்களாக இளையோர்களின்  இனஉணர்வு மிக்க எழுச்சி நடனம், சிறுவர்களின் பேச்சுக்கள் இடம்பெற்றதுடன், நிகழ்வில் சிறப்பு வெளியீடாக தமிழீழத் தேசியத்தலைவரின் நிழற்படங்கள் தாங்கிய செல்லிடப்பேசிக்குரிய உறை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன்  அகவை 60 இல் கலந்து சிறப்பித்த தமிழின உணர்வாளர் திரு கொளத்தூர் மணி; அவர்கள் வாழ்த்துரை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

27ம் திகதி வியாழக்கிழமை  நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் எமது தேசத்தின் புதல்வர்களுக்கு வீரவணக்கம் செலுத்த அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்வதோடு, தங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்றினத்தவர்களையும் அழைத்து வருமாறும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றார்கள்; தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளை

0 Responses to தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை60 இல் சுவிஸ் வாழ் தமிழின உணர்வாளர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com