Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாருக் ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று புதன்கிழமை இணைந்துள்ளார்.

அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கும், ஹூனைஸ் பாருக்குக்கும் இடையில் அண்மைக்காலமாக முரண்பாடு தொடர்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to காட்சி தாவல்; ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஐ.தே.க.வில் இணைவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com