மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதன் மூலம் நாட்டில் தேசிய அரசொன்றை உருவாக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய தேசியக் கட்சியினர் வரவேற்கும் நிகழ்வு சிறிகொத்தாவிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்திலிருந்து விலகி பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கான துணிச்சலான முடிவை எடுத்தார். வழமையாக எமது எதிராளிகளாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் காணப்படுவர். எனினும், இம்முறை எமது எதிரி மஹிந்த ராஜபக்ஷவே. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் இன்னமும் மைத்திரிபால சிறிசேனவே. அரசாங்கம் அவரை சட்டவிரோதமான முறையிலேயே விலக்கியுள்ளது.
பொது வேட்பாளர் வெற்றிபெறுவதை உறுதிசெய்வதற்காக நாம் முதலில் ஏனைய கட்சிகளுடன் ஐக்கியப்பட வேண்டும். இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வை காணாவிட்டால் நாளை நாம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றவுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். பொதுத்தேர்தலுக்கு பின்னர் கூட இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசு அமைவது அவசியம்” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கி தேசிய அரசினை உருவாக்குவோம்: ரணில் அழைப்பு!