Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் நியமன அறிவிப்பை சோனியா காந்தியின் உத்தரவுக்கு அமைய தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் நேற்று சனிக்கிழமை புதிய நியமனத்தை அறிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் பதவி விலகியதை அடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சனிக்கிழமை காலை அறிவித்தார். 65 வயதாகும் இளங்கோவன் ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்

65 அகவையுடைய இளங்கோவன் இரண்டாவது தடைவையாக கட்சிப் பொறுப்பபை ஏற்கின்றார். அத்துடன் முன்னாள் மத்தி அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது நியமனத்தையொட்டி கட்சி மேலிடத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் விருவாசமாகவும் இருப்பேன் என்று உறுதி வழங்கியுள்ளார்.

ஜி.கே.வாசன் கட்சியை விட்டு விலகமாட்டார் என்றும் கட்சியின் வளர்ச்சிக்கா தொடர்ந்து பாடுபடுவார் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு இவர் சத்திபவனில் கட்சிப் பொறுப்பை ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com