Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள்.

கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் குர்திஸ்தான் மக்கள் ஆதரித்து- அவர்கள் பாதுகாப்புக்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவு கரம் அளிக்க வேண்டும் என்று இன்று நவம்பர் 1 ஆம் திகதி, இன்று உலகெங்கும் அனைத்துலக ஆதரவு குரல் கொடுத்து போராட்டம் நடைபெற்றது.

அந்த அடிப்படையில் பிரான்சில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடாத்தினார்கள். அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு, தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை , அனைத்துலக ஈழத் தமிழர் அவை, மகளீர் அமைப்பு, இளையோர் அமைப்பு ஆகியோர் சேர்ந்து குர்திஸ்தான் இன மக்களுக்கு தமிழ் மக்களின் ஆதரவை அளித்தனர்.

விடுதலைக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்பதை இன்று உலகெங்கும் நடைபெற்ற போராட்டம், தென் ஆபிரிக்க போர்ராட்டதுக்கு பிறகு இன்று மாபெரும் மக்கள் குரல் குர்திஸ்தான் மக்களுக்கு கொண்டுத்துக்கொண்டிருக்கிரார்கள்.

0 Responses to கொபனே குர்திஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பிரான்சில் ஈழத்தமிழர்களும் பங்கேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com