ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றதும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தற்போதைய பாராளுமன்றம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், பாராளுமன்றத்தைக் கலைக்கப்போவதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறும் ஜனாதிபதி முறைமையை கொண்டு வருவதும், அரசியலமைப்பு திருத்தம் மூலம் 100 நாட்களுக்குள் சுதந்திரமான நீதி சேவை, ஊழல் மற்றும் இலஞ்சம், பொலிஸ், தேர்தல்கள் மற்றும் பொதுச் சேவை ஆணைக்குழுக்கள் அமைப்பதும் இந்த நாட்டு மக்களுக்கான எனது வாக்குறுதிகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாக்குறுதிகளை பாராளுமன்றம் மூலம் செய்ய முடியாது போயின், மக்களிடம் புதிய அனுமதி கோரும் வகையில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரத்தை நீக்க ஒத்துழைக்காவிடில், பாராளுமன்றத்தைக் கலைப்பேன்: மைத்திரிபால சிறிசேன