Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளருமாக இருந்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள நிலையில், தொடர்ச்சியாக கட்சி தாவல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

அரசாங்கத்திலிருந்து இதுவரையின் 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிரணியில் இணைந்துள்ளனர். இந்த நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இதன்போதும், அரசாங்கத்திலிருந்து மேலும் பல உறுப்பினர்கள் எதிரணியோடு இணைந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to இன்றும் கட்சி தாவல் காட்சிகள்: திஸ்ஸ அத்தநாயக்க அரசில் இணைகிறார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com