தமிழக மீனவர்கள் பிரதிநிகளின் 15 பேர் அடங்கிய குழு இன்று மத்திய
அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க டெல்லி புறப்பட்டது.
இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களின்
தூக்கு ரத்து என்று ராஜபக்ஷே கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியான போதிலும், அது இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது மீனவர்கள் தரப்பு விவாதம். இதுக்குறித்து உண்மையை அறிந்துக் கொள்ளவும், இலங்கை சிறையில் உள்ள மேலும் 21 மீனவர்களை விடுவிப்பது மற்றும் இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ள மீனவர்களின் 60 க்கும் மேற்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரிக்கை வைப்பது என்று பல கோரிக்கைகளை முன்னெடுத்து, இன்று மீனவர்கள்குழு டெல்லி புறப்பட்டு உள்ளது.
இரு நாட்டு மீனவர்கள் கடலில் சுமுகமாக மீன் பிடிக்க வழிவகை செய்யவும்
இவர்கள் கோரிக்கை வைக்க உள்ளனர் என்று தெரிய வருகிறது. இந்த குழு நாளை சுஷ்மா சுவராஜை சந்திப்பார்கள் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to தமிழக மீனவர்கள் குழு சுஷ்மா சுவராஜை சந்திக்க டெல்லி புறப்பட்டது!