Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்காக தனது கட்சி விரும்பும் பட்சத்தில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், கரு ஜயசூரியவுக்கும் இடையில் கொழும்பில் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கரு ஜயசூரிய மேலும் தெரிவித்துள்ளதாவது, “தனது கட்சியும், எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் விரும்பும் பட்சத்தில், தான் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகி எந்த ஒரு கட்சி அங்கத்துவமும் அற்ற அனைவரினதும் பொது வேட்பாளராக போட்டியிடத் தயார். 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அகற்றும் இடைக்கால ஜனாதிபதியாக மாத்திரம் தான் பணியாற்ற விரும்புகின்றேன்” என்றுள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் மனோ கணேசன் இன்று காலை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, “பொது வேட்பாளர் தொடர்பான பிரதான எதிரணிக் கட்சிகளின் நிலைப்பாடுகளை நாம் இப்போது கலந்து பேசி அறிந்துகொண்டு வருகின்றோம். இந்த அரசியல் கட்சிகளது பொதுவான பல நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி முடிவு எடுக்கும். அந்த முடிவு 19ஆம் திகதிக்கு பிறகு ஏனைய எதிரணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டு ஆதரவு கோரப்படும்” என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்காக பொது வேட்பாளராக தயார்; மனோவிடம் கரு ஜயசூரிய தெரிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com