தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் இரண்டு கட்சிகளும் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற விடயங்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையில் ஏற்கனவே சந்திப்பொன்று இடம்பெறவிருந்த போதிலும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமான அந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இந்த நிலையிலேயே, நாளைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

0 Responses to கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் இடையே நாளை சந்திப்பு!