இலங்கையில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தென்னிலங்கையில் எழுச்சி பெற்றுள்ள சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வீதி நிர்மானம், அபிவிருத்தி என்ற கோஷசங்களை முன்வைத்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை அரசாங்கம் அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்குக்கு யாழ்தேவி அனுப்பப்பட்டுள்ளது, அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் பல்வேறு புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டி பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம இங்கு பேசினார்.
வடக்குக்கு யாழ்தேவி மட்டுமல்ல, வீதிகளும் போடப்பட்டன என்பதையும் நாம் அறிவோம். அபிவிருத்தி என்ற பெயரில் அதற்காக உலக நாடுகளிடம் பெற்ற கடன் எவ்வளவு? அவற்றில் வடக்கு அபிவிருத்திக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பதை அவர் அறிவிப்பாரா?
யாழ்தேவியை மட்டும் அனுப்புவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. ஜனநாயக உரிமைகளையும் வழங்காது, அபிவிருத்தியால் தமிழர்களை அடிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அரசாங்கத்தின் இந்த உபாயத்தை தமிழ் மக்கள் ஏற்கமாட்டார்கள்; அடிபணிய மாட்டார்கள்.
ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் அறவழியில் போராடுவார்கள். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இனக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் தமிழர்களின் இனப்பரம்பலையும், அடையாளங்களையும் மாற்றியமைப்பதற்குத் திட்டமிட்ட அடிப்படையில் இந்த அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஒரு தேசிய இனத்தின் எதிர்காலத்தை அவ்வினத்தின் அடையாளங்கள்தான் தீர்மானிக்கும். இதேவேளை, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் மட்டுமல்லாது, இன்று தென்னிலங்கை மக்களும் ஊழலுக்கு எதிராகவும், எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
எனவே, ஜனநாயக உரிமைக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தென்னிலங்கையில் குரல் எழுப்பிவரும் எழுச்சி மிக்க சக்திகளோடு இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது” என்றுள்ளார்.

0 Responses to சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுந்துள்ள தென்னிலங்கைச் சக்திகளோடு இணையத் தயார்: மாவை சேனாதிராஜா