Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வாங்கும் தேவை ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை என்று அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் குழு எதிரணியில் இணைந்ததையடுத்து, அரசாங்கத்திலிருந்து இன்னும் பல உறுப்பினர்களும் வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாகவும், அந்த உறுப்பினர்களை தம்மோடு தக்க வைப்பதற்காக அரசாங்கம் பெரும் தொகைப் பணத்தைக் கொடுப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த விடயம் தொடர்பில், கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல விளக்கமளித்தார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க முடியாத அளவுக்கு ஐக்கிய தேசியக்கட்சி வங்குரோத்து நிலை அடைந்துவிட்டது.

அமரர் டி.எஸ்.சேனநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சியையும், கட்சி அங்கத்தவர்களையும் நடுரோட்டில் தள்ளிவிட்டுள்ளார். ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின்னர் வெற்றியின் பயணம் ஆரம்பமாகியுள்ளது என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று ஜனாதிபதித் தேர்தலில் தமது உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்து கொள்ள முடியாது திண்டாடி வருகின்றது.

இதனால், கட்சி அங்கத்தவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் ஏமாற்றமடைந்துள்ளதுடன், பலர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்துள்ளனர்” என்றுள்ளார்.

0 Responses to பணம் கொடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க வேண்டிய தேவை அரசுக்கு இல்லை: கெஹலிய ரம்புக்வெல

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com