சிறீலங்காவில் மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதன் அர்த்தம் தற்போது கேள்விக்குறியாகிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கங்கள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினையை தீர்த்து அந்தந்த பிரதேச மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் ஆட்சியை நடத்துவதற்காகவே மாகாண சபை முறைமையை இந்திய அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தமக்குள் வைத்துக் கொண்டு, மகிந்தராஜபக்ஷ கருணை காட்டினால் மாத்திரமே வடமாகாண சபைக்கு ஏதாவது கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.
13ம் திருத்தச் சட்டத்தில் உள்ள சில அதிகாரங்களை ஏனைய மாகாணங்கள் அனுபவிக்கும் போது, வடமாகாண சபை மாத்திரம் சுயாதீனமற்று காணப்படுகிறது.
முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக மாகாண சபையின் பிரதம செயலாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்து, சாதகமான தீர்ப்பினை பெற்ற முதல் சந்தர்ப்பமும் சிறிலங்காவிலேயே இடம்பெற்றுள்ளது.
இவ்வாறான நிலையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டமைக்கான நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

0 Responses to சிறீலங்காவில் மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டதன் அர்த்தம் கேள்விக்குறியாகிவிட்டது