கடந்த புதன்கிழமை காலை தியத்தலாவைக்கு அருகில் அமைந்துள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கான லயன் அறைகளை புதைத்தது.
2004ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மோசமான இயற்கை அனர்த்தத்தின் பின்னர் நிகழ்ந்த இந்த அனர்த்தத்தில் 300க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அன்றைய தினம் காலையில், அருகில் உள்ள மலைப் பிரதேசத்தில் இடியோசை போன்றதொரு சத்தம் கேட்டதாகவும், தொடர்ந்து 7.30 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டதாக நேரில் கண்டவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வேளையில் 75 பிள்ளைகள் பாடசாலைகளுக்கு கிளம்பி சென்றிருந்தார்கள்.
இந்த நிலையில், தற்போது துருப்பினர் பாரிய தேடுதல் பணியை மேற்கொண்டிருக்கும் வேளையில் இந்தப் பிள்ளைகள் தங்கள் பெற்றோரையும், உறவினர்களையும் இழந்து விட்ட துயரில் உறைந்து போயுள்ளனர்.
இப்பொது இந்த நிகழ்வு சம்பந்தமான மரண பரிசோதனைகளும் மீளாய்வுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கமும் இந்த மக்களின் தலைவர் என கூறிக்கொள்ளும் அமைச்சர் தொண்டமானும் தாங்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
கார்ப்பட் செய்யப்பட்ட அதிவேக பாதைகளும், மிகப் பிரமாண்டாமான திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் போது ஏழைகளிலும் ஏழைகளான இந்த மக்கள் நூற்றாண்டு காலமாக அதே லயன் அறைகளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் எதற்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் மலைகளின் மீது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அதிர்ச்சி தரும் செய்தி எழுதப்பட்டிருந்தது .
அதாவது அந்த அரசாங்கத்தின் பெரும்பான்மை 20 சதவிகிதத்தில் வீழ்ச்சியடைந்திருந்து.
ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று 40 நாட்களுக்கு பின்னர் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டு உயிர் தப்பியவர்கள், அநாதரவாகிப்போன பிள்ளைகள் ஆகியவர்களின் தாளாத துயரத்தின் மூலம், இடியோசை போன்ற இரண்டாவது செய்தி எழுதப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்த அனர்த்தத்தின் பின்னர் கருத்து தெரிவித்த பேராதெனிய பல்கலைக்கழக சிரேஸ்ட புவியியலாளரும் மண் சரிதவியலாளருமான பேராசிரியர் கபில் தஹநாயக்க,
மலைப் பிரதேசங்கள் ஆபத்தை எதிர்நோக்கக் கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை புறந்தள்ளி முறையற்ற முறையில் கட்டிடங்களை கட்டுவதாலேயே இவ்வாறு மண்சரிவுகள் ஏற்படுவதாக கவலை தெரவித்திருந்தார்.
சில திட்டங்கள் புவியலாளர்களின் ஆலோசனையையும் வழிகாட்டுதலையும் பெறாமலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
இதுவே மண்சரிவுகளுக்கான முக்கிய காரணம் என நான் நம்புகிறேன். இப்போது கூட நீண்டகால அடிப்படையில் ஏற்படக் கூடிய பின் விளைவுகள் பற்றி சிந்திக்காமல் மலைப் பிரதேசங்கள் சமப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பங்கள் குறிப்பிட்ட நிலப்பரப்பு தொடர்பாக மண்ணின் சரித்திர ரீதியான தகவல்கள் மற்றும் அப்பிரதேசத்தின் புவியில் தன்மை என்பவை குறித்து புவியியலாளர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மக்களும் அதிகாரிகளும் அறிவுறுத்தப்படுவது அவசியம் என்கிறார் பேராசிரியர் தஹநாயக்க.
அபிவிருத்தித் திட்டங்கள் அரசியல் மற்றும் தேர்தல் வெற்றிகளை நோக்காகக் கொண்டு நிறைவேற்றப்படுகின்றனவே அன்றி, நீடித்து நிலைக்கும் தன்மை, மக்களை மையப்படுத்திய அபிவிருத்தி என்னும் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடந்த வாரங்களில் பாரிய மழை வீழ்ச்சியின் பின்னர் பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் அகற்றப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்தாக கூறுகிறது.
அமைச்சர் மகிந்த அமரவீர இந்த மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு குடியகலுமாறு கேட்டிருந்தாலும் அவர்கள் அதற்கு செவிகொடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதேவேளையில் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையில் தென் கிழக்கு பருவப்பெயர்ச்சியின் போது அதிக மழை எதிர்பார்க்கப்படுவதால் அதிக மண்சரிவு அபாயம் உள்ளது என்கிறார்.
ஆனால் இப்பிரதேசத்தில் வாழும் உயிர் பிழைத்துள்ள ஒருவர் அமைச்சரின் இந்த கூற்றை மறுத்துள்ளதுடன், 2005 ஆண்டில் அதிகாரிகள் இந்த பிரதேசம் ஆபத்தானதால் அங்கிருந்து அகலுமாறு தமக்கு அறிவித்ததாகவும் ஆனால் மாற்று குடியிருப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்து தரப்படவில்லை என்று கூறினார் .
கொஸ்லாந்த அனர்த்தம் பல்லாயிரக்கணக்கான பெருந்தோட்ட மக்களின் நிர்க்கதி நிலைமையை வெளிக்கொணர்ந்திருக்கிறது.
இந்த மக்களின் வாக்கு அரசாங்கத்திற்கும், இந்த மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் அமைச்சர் தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் அதிமுக்கியமானதாகும்.
ஆனால் தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குறுதிகளை தேர்தல் முடிந்தவுடனேயே காற்றில் பறக்க விட்டுவிட்டு அவற்றை மறந்துபோகும் இந்த மக்களின் அரசியல் தலைவர்கள், குரலற்ற அதேவேளையில் ஒதுக்கப்பட்ட இந்த மக்களின் தேவைகளுக்கு பதிலாக தமது சுயநலம், பெருமை, அதிகாரம், பிரபல்யம், வசதிகள், சலுகைள் ஆகியவற்றிற்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள்.
மக்களின் தேவைகள் அவர்களின் முன்னுரிமை பட்டியலில் கடைசி விடயங்களாகவே வைத்திருக்கிறார்கள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இது தொடர்பாக வெட்கப்பட வேண்டும்.
இப்போது மட்டுமல்ல கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆட்சிக்குவரும் அரசாங்கங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தநாட்டில் வறுமையிலும் வறுமையில் வாழும் கடும் உழைப்பாளிகளான இந்த மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசாங்கத்தோடு ஒட்டிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது.
தேயிலை இன்றைய நாள் வரையில் இலங்கைக்கு மிகப் பெரிய வெளிநாட்டு செலவாணியை கொண்டுவரும் தொழிற்துறைகளில் ஒன்றாக இருந்தாலும் தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் போசாக்கு என்பவை இந்தநாட்டிலேயே மிகத் தாழ்ந்த நிலையிலேயே உள்ளன.
பல ஆய்வுகளின் படி பெருந்தோட்டங்களில் வாழும் சிறுவர்களின் மூன்றில் ஒருவர் போசாக்கற்ற நிறை குறைந்த நிலையில் உள்ளதாகவும், 40 விகிதமான குழந்தைகள் பிறக்கும் போது நிறைகுறைவான பிள்ளைகளாக பிறப்பாதாவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஆய்வுநடை பெற்ற காலத்திற்குப் பின்னர் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களாகிய இவர்களுக்கு அவர்களுடைய சொந்தத் தலைவர்களிடம் இருந்து கூட மிகக்குறைந்த கவனிப்பே கிடைத்துள்ளது.
பதினைந்து இலட்சம் அல்லது இலங்கையில் வாழும் 21 மில்லியன் மக்கட் தொகையில் 5 விகிதமானவர்கள் தேயிலை தோட்டத் துறையில் தொழில் செய்கின்றனர்.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வு இவர்களில் 11.4 விகிதத்தினர் தேசிய ரீதியான வறுமைக் கோடான மாதாந்தம் 3,028 ருபாய்க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த புதன் கிழமை நடைபெற்ற பேரனர்த்தம் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர் தொண்டமானுக்கும் விழித்தெழுமாறு விடுக்கப்பட்ட அதிரடிச் செய்தியாகும்.
டெய்லிமிரர் ஆசிரியர் தலையங்கம்,
தமிழாக்கம்- என்.உதயகுமார்

0 Responses to வெட்கம்! வெட்கம்! அமைச்சர் தொண்டமானிற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும்