Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐந்து தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சிறிலங்காவின் ஜனாதிபதியுடன், இந்திய பிரதமர் நேரடியாக விளக்கம் கோரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

போதைப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சுமத்தபட்டு குறித்த ஐந்து இந்திய மீனவர்களுக்கும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

எனினும் குறித்த மீனவர்கள் அப்பாவிகள் என்று தாம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 25ம் திகதி முதல் காத்மண்டுவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடியும், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும் அங்கு செல்கின்றனர்.

இதன் போது இடம்பெறும் சந்திப்பின் போது, மோடி இந்த விடயத்தை மகிந்தராஜபக்ஷவிடம் எழுப்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to மரண தண்டனை விவகாரம் ராஜபக்சவிடம் விளக்கம் கேட்கிறார் மோடி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com