Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தாயகத்தில் துன்புற்றிருக்கும் எம் உறவுகளுக்கு உதவுமுகமாக பிரான்சு ஸ்ராஸ்பூர்க் தமிழர் அமைப்புகள் இணைந்து 27.10.2014 ஞாயிற்றுக்கிழமை தமிழர் கலைமாலையை நடாத்தியிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வாக தியாக தீபம் திலீபன், வீரவேங்கை 2ம் லெப். மாலதி ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு ஈகைச்சுடரினை ஏற்றி வைக்து
அகவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வின் மங்கள விளக்கினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் துணைப் பொறுப்பாளர் திரு. அலெக்ஸ், மற்றும் ஸ்ராஸ்பூர்க் மாநிலத்தின் பிரெஞ்சு முக்கியஸ்தர்களும் ஏற்றி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து அந்நகரில் வாழும் தமிழ்க்குழந்தைகள் பாட்டு, பேச்சு, கவிதையும், வழங்கியிருந்தனர். ஜேர்மன் நாட்டில் இருந்து வந்து சிறப்பித்த கலைஞர்களால் மனிதம் என்கின்ற நாடகம் மக்களிடம் பலத்த வரவேற்பினை தந்திருந்தது. பரிசில் இருந்து வந்த கலைபண்பாட்டு கழக நாடக கலைஞர்கள் வழங்கிய “இன்றைய காலத்தின் தேவை’’ என்கின்ற நாடகம், மற்றும் நாட்டிய நிகழ்வும், பாரிஸ் முன்னனிக்கலைஞர்களின் தமிழீழ எழுச்சி பாடல்களும், மெல்லிசைப் பாடல்களும், சிறப்பாக அமைந்திருந்தது. ஸ்ராஸ்பேர்க் கலைஞர் இளைஞர் யுவதிகள் இணைந்து தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான காத்தவராயன் கூத்தும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கடந்த ஆண்டு இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஸ்ராஸ்பூர்கில் நடைபெற்ற முடிந்த தமிழர் கலைமாலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com