மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் சிங்களை மக்களைப் போல, தமிழ்- முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு எதிரான பொது எதிரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றிடம் கருத்து வெளியிடும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சிங்கள மக்களுக்கு அதிருப்தி உண்டு. ஆனால், சிங்கள மக்களைவிட தமிழ்- முஸ்லிம் மக்களுக்குத் தான் அதிக அதிருப்தி உண்டு.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்- முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை. இன்றைக்கு வடக்கு- கிழக்கில் இடம்பெறும் அத்துமீறல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அரசாங்கமே காரணம். அப்படியிருக்க அந்த மக்கள் அரசாங்கத்தை ஆதரிக்க மாட்டார்கள்.
சிங்கள மக்களை மட்டும் நம்பி பொது எதிரணியை நாம் அமைக்கவில்லை. சிறுபான்மை மக்களின் ஆதரவும் வேண்டும். அதுதான் அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கு அவசியமானது” என்றுள்ளார்.

0 Responses to அரசுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்- முஸ்லிம் மக்களும் இணைய வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல