தமிழீழ விடுதலைப் புலிகளை இரண்டாக பிரிப்பதற்காகவே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஆயுதங்களை வழங்கினர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
திஸ்ஸமஹாராம பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெவித்துள்ளதாவது, “ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதாகவும், இவர் (மஹிந்த ராஜபக்ஷ) நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி யுத்ததத்தை நிறைவு செய்ததாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஜனாதிபதி கூறுகின்றார்.
ரணசிங்க பிரேமதாஸ அரசியல் தந்திரோபாயங்களை பயன்படுத்தி புலிகளை இரண்டாகப் பிரித்தார். அவர் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது உண்மை. புலிகள் இயக்கத்தின் மாத்தைய்யா தரப்பினருக்கே ஆயுதங்களை வழங்கினார்.
புலிகள் இயக்கத்தில் சமாதானத்தை விரும்பிய மாத்தைய்யாவின் தரப்பினருக்கு ஆயுதம் வழங்கியமை எனது தந்தையை கொலை செய்வதற்கு காரணமாக அமைந்தது. நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு ஆயதம் வழங்கவில்லை. புலிகளை இரண்டாகப் பிரிப்பதற்கே ஆயுதம் வழங்கினார்” என்றுள்ளார்.

0 Responses to புலிகளைப் பிரிப்பதற்காகவே ரணசிங்க பிரேமதாஸ ஆயுதம் வழங்கினார்: சஜித் பிரேமதாஸ