எதிரணியின் பொது வேட்பாளராக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருக்கும் மைத்திரிபால சிறிசேனவை நேற்று வியாழக்கிழமை மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சந்தித்துப் பேசியுள்ள நிலையில், அவர் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திலிருந்து வெளியேறுவார் என்று கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் அண்மைக்காலத்தில் அதிருப்தி காணப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 Responses to எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன; இன்று அறிவிப்பு?