Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவானால், நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளார் என்று எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது அவரது தனிப்பட்ட குடும்பத்துக்கோ தான் ஒருபோதும் எதிரியல்ல. ஊழல், மோசடி, அநியாயம் மற்றும் குடும்ப ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராகவே எதிரணியின் பொது வேட்பாளராகத் தீர்மானித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய முதலாவது பிரசாரக் கூட்டத்தை பொலனறுவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் உங்களை தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கவில்லை. உங்களது குடும்பத்துக்கு எதிராகவும் தனிப்பட்ட ரீதியில் கோபம் இல்லை. உங்களது ஊழல், மோசடிகள், அநியாயம், குடும்ப ஆட்சி மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஆகியவற்றையே நான் எதிர்க்கிறேன்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிப்பதற்கே மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். நான் அனைத்து விடயங்களையும் அறிவேன். எனக்கு தெரிந்த பலவற்றை, எதிர்காலத்தில் வெளிப்படுத்துவேன்” என்றுள்ளார்.

0 Responses to அனைத்து அரசியல் கட்சிகளையும் இல்லாதொழிக்க மஹிந்த தீர்மானம்: மைத்திரிபால

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com