Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தென்னிலங்கையில் பேசப்படும் அளவுக்கு வடக்கு மாகாணத்தில் சுதந்திரம் இல்லை. வடக்கிலுள்ள மக்களின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது என்று எதிரணியின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஆகவே, வடக்கிலுள்ள மக்கள் உள்ளிட்ட முழு நாட்டு மக்களுக்கும் சம உரிமையைப் பெற்றுக்கொடுத்து, அனைவரும் சமமாக வாழக்கூடிய சமூகமொன்றைக் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய வைத்தியர்கள் சங்கம் ஆதரவளித்துள்ளது. அதனை அறிவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ராஜித சேனாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியாகிவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் நெருங்கிவிட்டது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் அணிதிரளவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்படும் தேசிய அரசு இரண்டு வருடங்களுக்கு செயற்படும். இந்த தேசிய அரசில் பங்கேற்று நாட்டு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும். பாராளுமன்றமும், அமைச்சரவையும் இன்று வெறும் இறப்பர் முத்திரைகளாகவே உள்ளன. இதை உதாரணமாகக் கொண்டு இந்த அரசுக்கும் ஹிட்லர், முசோலினிக்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தெற்கில் பேசப்படும் அளவுக்கு வடக்கில் சுதந்திரம் இல்லை: ராஜித சேனாரட்ன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com