Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஒரு வருட காலமாக மத்திய அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியை மக்களின் நலன்களுக்காக செலவு செய்யாது, தூங்கிக் கொண்டிருந்த வடக்கு மாகாண சபையை நாங்களே (ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி) தட்டி எழுப்பியுள்ளோம். அதன் பின்னரே விழித்துக்கொண்டவர்கள், 70 வீதமான நிதியை ஒரு மாதத்தற்குள் செலவு செய்யப்போவதாக யாதார்த்திற்கு புறம்பாக கூறி வருகின்றனர் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மாகாண சபைக்கு மத்திய அரசினால் பல்வேறு திட்டங்களுக்கு பல மில்லியன் ரூபாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தத் திட்டங்களை உரிய காலத்தில் மாகாண சபைக்கு கீழ் இயங்குகின்ற திணைகளங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கே உண்டு.

அதற்கான அதிகாரங்களும் மாகாண சபையிடம் உள்ளது. ஆனால் அதனை அவர்கள் செய்வதாக இல்லை. நாங்கள் புள்ளி விபர ரீதியாக ஆதாரத்துடன் வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களை வெளிப்படுத்திய பின்னர் இப்பொழுது ஒரு மாத்திற்குள் செலவு செய்யப்பபோதாக கதைவிடுகின்றனர்.

இதுவரை காலமும் அரசினால் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என மக்கள் மத்தியில் கூறி வந்தவர்களுக்கு ஒரு மாத்திற்குள் செலவு செய்வதற்கு எங்கிருந்து நிதி கிடைத்து?” என்றுள்ளார்.

0 Responses to தூங்கிக் கொண்டிருந்த வடக்கு மாகாண சபையை தட்டி எழுப்பியுள்ளோம்: முருகேசு சந்திரகுமார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com