Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 60 பிறந்த நாள் இன்றாகும் (நவம்பர் 26). அத்தோடு, மாவீரர் நாள் நினைவு தினம் நாளை (நவம்பர் 27) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, யாழ். பல்கலைக்கழகத்துக்குள் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வோ, மாவீரர் நாள் நினைவு ஏற்பாடுகளோ இடம்பெற்றுவிடக் கூடாது என்பதைத் தடுப்பதற்காகவே இராணுப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தால் சுட்டுக்கொல்வோம் என்று நான்கு மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் சுவரொட்டிகள் சில ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to யாழ். பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி இராணுவப் பாதுகாப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com