மாவீரர்களின் பெற்றோர், குடும்ப உறவுகள் ஆகியோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சி இன்று நவம்பர் 23 ஆம் நாள் மாலை 7 இலிருந்து 9 மணி வரை தென் மேற்கு லண்டன் பகுதியில் SW19 1LA,South Wimbledon, 78, Kingston Road இலுள்ள Merton Hall இலும் வடமேற்கு லண்டன் பகுதியில் HA2 9ER, South Harrow, 89, Malvern Avenue இலுள்ளSt Andrew Church Hall இலும் நடைபெற உள்ளன.
தாயக விடுதலைக்காக விதையான மாவீரரின் உயிரோடு கலந்த உறவுகள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள். எத்தனையோ ஆக்கிரமிப்பு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தாய் மண் மீட்பதற்காகக் களமாடிய வீர மறவர்களுக்கு உறுதுணையாக நின்ற அவர்கள் போற்றுதற்குரியவர்கள். தங்கள் பிள்ளைகளை மட்டுமன்றி தமிழீழ விடியலுக்காகப் போராடிய அத்தனை மண்ணின் மைந்தர்களையும் தம் பிள்ளைகள் போல் பேணிக் காத்த மாவீரரின் பெற்றோர், இறுதி வரை துணையிருப்போம் என கைப்பிடித்து மணவாழ்வில் இணைந்த போதும் மண் வாழவும் உற்ற பங்களித்த மாவீரரின் வாழ்க்கைத் துணைகள், மாவீரரின் உயிரின் உருவமாக வாழும் மாவீரர் பெற்றெடுத்த செல்வங்கள், மாவீரரோடு உடன் பிறந்தோர், மாவீரரின் உற்ற உறவுகள் அனைவருமே மதிப்பளிதற்குரியவர்கள்.
எந்த இலக்கை அடைவதற்காக மாவீரர்கள் தம் இன்னுயிரை ஈகம் செய்தனரோ அந்த இலக்கை அடைவதற்காக நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும். அவர் நடந்த பாதையிலே நாமும் உறுதியுடன் தடம் பதித்து முன்னேற வேண்டும். தமிழீழ மக்களாகிய நாம் எல்லோரும் தமிழீழத்தை வென்றெடுப்பதற்காகத் தமைக் கொடுத்த மாவீரர்களின் குடும்ப உறவுகளாக ஒன்றுபடுவோம்.
பிரித்தானியாவில் வாழுகின்ற அனைத்து மாவீரர் குடும்ப உறவுகளையும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பினை ஏற்படுத்தி, மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்துமாறு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
வட மேற்கு லண்டன் - 07932231207
வடகிழக்கு லண்டன் - 07529897735
தென்மேற்கு லண்டன் - 07478771306
தென்கிழக்கு லண்டன் - 07946055556
லண்டன் புறநகர் பகுதி - 07412226628
மேலதிக விபரங்களுக்கு பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - 02033719313

0 Responses to பிரித்தானியாவில் இன்று இடம்பெறவுள்ளது மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு