Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் கட்சி தாவியுள்ளார்.

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியாளராக இருந்தவர் களுத்துறை எம்.எம். அம்ஜத்.இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் பிரிவின் முக்கியஸ்தர்.

இலங்கையின் வரலாற்றுச்சாதனையாக குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பாலம் உள்ளிட்ட கீர்த்திமிகு நிர்மாணங்களின் மூளையாகச் செயற்பட்டவர் இவர்தான்.

இந்நிலையில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு நாடு முழுவதும் கீர்த்தியை ஏற்படுத்திக் கொடுத்த மகநெகும திட்டத்தை வடிவமைத்து, அதற்குப் பெயர் சூட்டிக்கொடுத்ததும் இவர்தான்.

2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவின் வெற்றிக்கு மகநெகும திட்டத்தின் மகத்தான வெற்றியும் ஒரு காரணியாக அமைந்திருந்தது.

அதுமாத்திரமன்றி 2005ம் ஆண்டளவில் முஸ்லிம்களால் கண்டுகொள்ளப்படாத மஹிந்தவுக்கு ஆதரவாக முஸ்லிம்களை ஒன்றுதிரட்டி ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற்றது.

சுகததாச உள்ளரங்கில் நடைபெற்ற அந்த  கூட்டத்திற்கான ஏற்பாட்டிலும் ஆளுனர் அலவி மௌலானா, ஆர்.எப். அஷ்ரப் அலீ, அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, அனுரகுமார திசாநாயக ஆகியோருடன் அம்ஜத்தும் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

இதன் காரணமாக பின்வந்த காலங்களில் மஹிந்தவின் வலது கரமாகவும் இவர் அறியப்பட்டிருந்தார்.

அமைச்சர்களை விட இவருக்கு மஹிந்தவிடம் செல்வாக்கு அதிகமாக இருந்தது.

தெற்கு அதிவேகப் பாதை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான அதிவேகப் பாதை, களனி கங்கை வழியாக கொழும்புக்குள் அமைக்கப்படும் பறக்கும் பாதை, யாழ்ப்பாணத்துக்கான அதிவேகப் பாதை என்பவற்றின் திட்டங்கள் , மூலோபாயங்கள் அனைத்திலும் அம்ஜத் பிரதானமாக செயற்பட்டுள்ளார்.

இவை அனைத்தும் நிகழ்காலத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கீர்த்தியை பெற்றுத்தந்துள்ள திட்டங்களாகும்.

எனினும் தற்போதைய நிலையில் மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சி மீது வெறுப்பு  கொண்டுள்ள அம்ஜத், பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு வழங்க  தீர்மானித்துள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்தின ஏற்பாட்டில் மைத்திரிபால சிரிசேனவை  சந்தித்து தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

இது ராஜபக்ஷ தரப்பினருக்கு பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரம் அம்ஜத் கட்சி தாவினார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com