Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விதித்த நிபந்தனைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஊடகங்களின் வாயிலாக அறிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இராணுவத்தை வெளியேற்றி மக்களை குடியேற்றல், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வு ஆகிய நிபந்தனைகளுக்கு சரியான தீர்வினை வழங்குகின்ற வேட்பாளருக்கு தங்களின் ஆதரவு வழங்கப்படும் என்று முன்னதாக சுரேஷ் பிரேமசந்திரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தங்களிடம் அந்த கோரிக்கைகள் நேரடியாக முன்வைக்கப்படுமாக இருந்தால் அது குறித்து பரிசீலித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று அரசாங்கமும், எதிர்கட்சியும் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து இன்று ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்ட சுரேஷ், இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் தரப்பு அழைப்பு விடுத்தால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியுள்ளார்.

எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் இதன் போது வலியுறுத்தினார்.
இதேவேளை இந்த நிபந்தனைகளுக்கு மகிந்த அரசாங்கம் சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில், அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்குமா? என்று அந்த ஊடகம் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கான இணக்கப்பாடு காணப்படும் பட்சத்தில் கூட்டமைப்பு ஆலோசனை செய்து இதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.

0 Responses to பேச்சுவார்த்தைகள் ஒளிவுமறைவின்றி இருக்க வேண்டும் - கூட்டமைப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com