Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி பிரச்சினை தொடர்பாக டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை  இன்று (16.11.2014) தலைமைக் கழகம் தாயகத்தில் சந்தித்தனர்.

சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, காவிரி நதியினால் 12 மாவட்டங்கள் பயன்பெற்று வருகின்றன. மூன்று கோடி விவசாயிகள் மற்றும் 75 சதவிகித தமிழக மக்களின் வழ்வாதாரம் காவிரியை நம்பி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் இரண்டு அணைகள் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இதனைத் தடுக்க தமிழக மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள் என அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

வரும் 22 ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சாலை மறியல், இரயில் மறியல், கடையடைப்பு நடைபெற உள்ளது. இதில் தஞ்சையில் நடைபெறும் இரயில் மறியலில் தான் பங்கேற்கப் போவதாக வைகோ தெரிவித்தார். வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் 22 ஆம் தேதி நடைபெறும் கடையடைப்புக்கு ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

0 Responses to மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இரயில் மறியல் போராட்டத்தில் வைகோ பங்கேற்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com