Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு ஆசிய நாடான தாய்வானில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அந்நாட்டுப் பிரதமரான ஜியாங் யி ஹுவா தான் பதவி விலகுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

கடந்த வசந்த காலத்தில் அண்மை வல்லரசு நாடான சீனாவுடன் தாய்வானின் சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து தாய்வானில் புரட்சி வெடித்திருந்தது.

சனிக்கிழமை நடந்த தேர்தல் இப்புரட்சிக்குப் பின் நிகழ்த்தப் பட்ட முதலாவது தேர்தலாகும். இதில் பிரதமர் யின் ஹுவா இன் ஆளும் கட்சியான Kuomintan இரண்டாவது ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. இக்கட்சி மொத்த வாக்குகளில் 40% வீதத்துக்குச் சற்று அதிகமாக பெற்றிருந்தது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 47% வீதத்துக்கும் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றது. இதுவரை தாய்வானின் நீண்ட கால விரோதி நாடாக இருந்த சீனாவுடன் யின் ஹுவாவின் அரசு ஷாங்காயில் கடந்த வருடம் சர்ச்சைக்குரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. இதனை அடுத்து 'Sunflower Movement' என்று தாய்லாந்து ஊடகங்களால் சித்தரிக்கப் பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றின் மூலம் தாய்வாந்து பாராளுமன்றமும் முக்கிய சில வீதிகளும் அந்நாட்டு மக்களால் முற்றுகையிடப் பட்டிருந்தன.

இதற்கு முக்கிய காரணமாக சீனாவுடனான குறித்த வர்த்தக ஒப்பந்தம் தாய்வானில் உள்ள சிறியளவான வர்த்தகங்களை முற்றாகப் பாதிக்கக் கூடும் என்பதுடன் தாய்லாந்து தீவில் சீனாவின் அதிகாரம் பரவவும் காரணமாகி விடும் என்ற அச்சம் மக்களிடையே தோன்றியிருந்ததே ஆகும். 1949 ஆம் ஆண்டு ஒர் சிவில் யுத்தத்தின் மூலம் தாய்வானும் சீனாவும் பிரிந்த போதும் சீனா இன்னமும் தாய்வானைத் தனது ஓர் பகுதியாகவே உரிமை கொண்டாடி வருகின்றது. மேலும் தாய்வான் தீவை நோக்கி எந்நேரமும் தாக்குவதற்குத் தயாராக சீனாவின் ஏவுகணைகள் எல்லையில் நிறுத்தப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீப காலமாக சூழ்நிலை சற்று மாறியுள்ளது. 6 வருடங்களுக்கு முன்னர் தாய்வானுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்து இருக்கவில்லை. ஆனால் தற்போது ஒரு கிழமைக்கு நூற்றுக் கணக்கான விமானங்கள் இரு நாட்டுக்கும் இடையே பயணிக்கின்றன. மேலும் இருநாடுகளுக்கும் இடையே சுற்றுலாத் துறையும் அபிவிருத்தி அடைந்துள்ளது. ஆனால் எதிர்மறை விளைவாக தாய்வானின் பல கம்பனிகள் தமது தொழிற்சாலைகளை சீனாவுக்கு நகர்த்தியுள்ளதுடன் தாய்வான் தீவில் சீன வங்கிகள் பலவும் செயற்படத் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தேர்தல் தோல்வியை அடுத்து தைவானின் பிரதமர் பதவி விலகல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com