வருடமொன்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 70 சதவீமான நிதியை செலவு செய்தால் அது வெற்றிகரமான செயற்பாடாகும். ஆனால் வடமாகாண சபையானது தனக்கொதுக்கப்பட்டதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நிதியை செலவு செய்துள்ளதென தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் திட்டங்களுக்காக அடுத்த வருடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியையே அவ்வாறு செலவு செய்யவில்லையென குறை கூறுகின்றனர். குறிப்பாக ஈபிடிபி முக்கியஸ்தரும் எதிர்கட்சி தலைவருமான தவராசா இக்குற்றச்சாட்டை கொழும்பில் வைத்த பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக இரணைமடு குடிநீர் திட்ட நிதி, ஐஐடிபி யின் திட்ட நிதி போன்ற அடுத்த வருடத்திற்குமானவற்றையே சுட்டிக்காட்டுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to வடமாகாணசபை சித்தி அடைந்துள்ளது! சான்றிதழ் வழங்கும் சீ.வி.கே!