Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 100 மில்லியன் ரூபாய் ஊழல் மோசடி தொடர்பாக வடமாகாணசபை தனியான விசாரணைக்குழுவை அமைக்கவுள்ளது.

குறித்த ஊழல் மோசடிகளில் தற்போதைய ஆளுநருக்கும் தொடர்புகள் இருக்கலாமென்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இவ்விசாரணைக்குழுவை அமைப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் அமைத்த விசாரணைக்குழு தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளை காப்பாற்றவே முற்படுவதாகவும் கூறப்படுகின்ற நிலையில் பொறியியலாளரிடமிருந்து ஊழல் செய்த பணம் விரைவாக திரும்பப்பெறுமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே உலக வங்கியின் 3,500 மில்லியன் ரூபாய் செலவில் நெல்சிப் திட்டத்தின் கீழ் வடக்கில் 120 வேலைத்திட்டங்கள் 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தை செயற்படுத்திய பொறியியலாளரே இந்த ஊழல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள், ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருந்த போதும் விசாரணை நடைபெறுவதற்கு முன்னரே பொறியியலாளர் ஊழல் செய்த பணம் மீளப்பெறப்பட வேண்டும். இல்லையேல், அவர் அதனை செலவு செய்துகொள்ளவோ அல்லது அந்நிதியைக்கொண்டு தப்பித்து செல்லவோ சந்தர்ப்பங்கள் இருப்பதாக வடமாகாண அவைத்தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் இம்மோசடி தொடர்பில் தொடர்புடைய பிரதம செயலாளர் விஜயலட்சுமி றமேஸ் மற்றும் உள்ளுராட்சி ஆணையாளர் ம.ஜெகூ உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல் பற்றி அவர் வாய் திறந்திருக்கவில்லை.

ஆயினும் ஜனாதிபதி மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் அனுப்பியுள்ள கடிதத்தில் அனைவரும் விசாரணைகளிற்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பணிநிறுத்தப்பட வேண்டுமென்பதுடன் காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

0 Responses to ஊழல் மோசடி விசாரணைக்கு வடமாகாணசபையும் விசாரணை குழு அமைக்கின்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com