Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் செனட் சபைக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிகளவு இடங்களைக் குடியரசுக் கட்சி பெற்று முன்னிலை வகித்துள்ளதுடன் இதனால் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஒபாமாவுக்கு அவரின் இறுதி 2 வருட கால பதவிக் காலத்தில் சவால்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தேர்தலில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மைப் பலம் பெற்றுள்ளது.

இதனால் அமெரிக்க அதிபர் ஒபாமா தனது அனைத்துத் திட்டங்களையும் அமுல் படுத்துவதற்கு இனி எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெற வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சூழ்நிலை ஏற்படுவதற்கு ஒபாமாவின் அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளே காரணம் என்றும் கூறப்படுகின்றது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் அவையின் 1/3 பகுதிக்கு மட்டுமான தேர்தலே நடைபெற்றது. இதில் 38 மாகாணங்களுக்கான கவர்னர் பதவிகள் ம்ற்றும் 46 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோருக்கான தேர்தலும் இடம்பெற்றது. இன்று புதன்கிழமை வெளியான இத்தேர்தலிகளின் முடிவுகள் படி எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை 45 இலிருந்து 52 ஆக உயர்ந்தும் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 53 இலிருந்து 43 ஆகக் குறைந்தும் உள்ளது.

மேலும் குடியரசுக் கட்சி அமெரிக்காவின் இயோவா, கொலராடோ, அர்க்கன்சாஸ், தென் டகோட்டா, மொன்டானா, W.வேர்ஜினியா மற்றும் வட கரோலினா என்ற முக்கிய மாநிலங்களின் ஆசனங்களையும் சுவீகரித்துள்ளது. இதேவேளை தெற்கு கரோலினா ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே என்ற பெண்மணி இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதுடன் கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு கமலா ஹாரிஸ் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க செனட் சபைத் தேர்தலில் குடியரசுக் கட்சி முன்னிலை!:ஒபாமாவுக்கு சவால் அதிகரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com