Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் தற்போது (வெள்ளிக்கிழமை பிற்பகல்) நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தன்னை பொது வேட்பாளராக பிரேரித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். தற்போதும் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இதனிடையே, இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயசிங்க, அர்ஜூண ரணதுங்க உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

0 Responses to பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com