ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்து அதிகாரத்தைத் தாருங்கள், நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு புதிய நகர மண்டபத்தில் தற்போது (வெள்ளிக்கிழமை பிற்பகல்) நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஜனாதிபதியானதும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பேன். அத்தோடு, அரசியலமைப்பின் 17வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், 18வது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்குவேன். நாட்டில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் உதவவேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to நூறு நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன்: மைத்திரிபால சிறிசேன